Dada Movie: பாசிட்டிவ் விமர்சனங்களை குவிக்கும் 'டாடா': கொண்டாட்டத்தில் பிக்பாஸ் கவின்.!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ சரவணன் மீனாட்சி‘ தொடரின் மூலம் பிரபலமானவர் கவின். சின்னத்திரையில் கலக்கி வந்த இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். மூன்றாவது சீசனில் கலந்துக்கொண்ட இவர் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார்.

பிக்பாஸில் கலந்துக்கொண்ட கவின் டைட்டிலை வெல்வார் என அவரது ரசிகர்கள் எதிராபார்த்தனர். ஆனால் திடீரென பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸை விட்டு வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார் கவின். இந்த நிகழ்ச்சிக்கு பின் இவரது நடிப்பில் ‘லிப்ட்’ என்ற படம் வெளியானது. ஹாரர் த்ரில்லர் படமாக வெளியான ‘லிப்ட்’ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் ‘டாடா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் கவின். இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் பாபு இயக்கியுள்ளார். ஒலிம்பியா மூவிஸ் சார்பாக எஸ். அம்பேத் குமார் டாடா படத்தை தயாரித்துள்ளார். இந்தப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Leo, Trisha: ‘லியோ’ படத்திலிருந்து விலகியதாக பரவிய வதந்தி: திரிஷா செய்த காரியம்.!

இந்நிலையில் நேற்றைய தினம் ‘டாடா’ படத்தின் பத்திரிக்கையாளர்களுக்கான சிறப்புக்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படத்தை பார்த்த விமர்சகர்கள் காமெடி ஜானரில் பேமிலி செண்டிமென்ட்டாக ‘டாடா’ உருவாகியுள்ளதாக விமர்சனம் அளித்து வருகின்றனர். மேலும் எமோஷனல் காட்சிகளும், கவினின் நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலம் அளித்துள்ளதாகவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

‘டாடா’ படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தப்படத்தில் கவின், அபர்ணா தாஸ், பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘டாடா’ படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.