அறுவை சிகிச்சை அறையில் மோதிக் கொண்ட மருத்துவர்கள்!!

அறுவை சிகிச்சை அறையில் நோயாளியை படுக்க வைத்துவிட்டு இரண்டு மருத்துவர்கள் மோதிக் கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் பட்டான் நகரில் உள்ள மருத்துவமனையில் உயர்பொறுப்பில் இம்தியாஸ் என்ற மருத்துவரும், அவருக்கு கீழ் டுபாயில் என்ற மருத்துவரும் பணியாற்றி வருகின்றனர். எந்த ஒரு அறுவை சிகிச்சையையும் தன்னைக் கேட்டு செய்ய வேண்டும் என்று இம்தியாஸ் கூறி வந்துள்ளார்.

ஆனால், ஏழ்மை நிலையில் உள்ள நோயாளிக்கு அவசர அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர் டுபாயில் தயாரானதாக தெரிகிறது. ஆப்ரேஷன் தியேட்டரில் நோயாளி படுக்கையில் தயாராக இருந்தார்.

அப்போது வந்த மருத்துவர் இம்தியாஸ், தனது அனுமதி இல்லாமல் எப்படி அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று மருத்துவர் டுபாயிலை திட்டியுள்ளார். இருவரும் அறுவை சிகிச்சை அறையிலேயே சண்டையிட்டு கொண்டதால் நோயாளிக்கு பீதி ஏற்பட்டது.

இதுகுறித்து டுபாயில், பாரமுல்லா தலைமை மருத்துவ அதிகாரிக்கு, புகார் தெரிவித்தார். விரிவான அறிக்கை சமர்ப்பிக்கும்படி பாரமுல்லா தலைமை மருத்துவ அதிகாரி பஷீர் அகமது உத்தரவிட்டார். பட்டான் நகர மருத்துவ அதிகாரி மஸ்தூரா அறிக்கை அளித்தார்.

ஆனால் உயர் பொறுப்பில் உள்ள மருத்துவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் உன்னதமான தொழிலான மருத்துவத்தில், அனுமதி பெற்று மருத்துவம் பார்க்க வேண்டும் என்று கூறும் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.