ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிர் இழந்து உள்ளார். மேலும் ஏழு பள்ளி மாணவிகள் காயமடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பள்ளி மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாராதவிதமாக திடீரென ஆட்டோ சாலையை விட்டு விலகி ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் ஆட்டோவில் பயணம் செய்த 7 பள்ளி மாணவிகள் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து காயமடைந்த மாணவிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணையில் ஆட்டோவின் குறுக்கே காட்டுப்பன்றி வந்ததால், கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.