புதுடெல்லி: எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி, குளிர்பான நிறுவனமான கோக கோலாவுடன் இணைந்து ரியல்மி 10 புரோ கோக் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்து விரிவாக பார்ப்போம்.
உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது.
இந்நிலையில், பிரபல குளிர்பான நிறுவனமான கோக கோலா நிறுவனத்துடன் இணைந்து ரியல்மி 10 புரோ கோக் எடிஷன் ஸ்மார்ட்போன் இப்போது அறிமுகமாகி உள்ளது. வரும் 14-ம் தேதி விற்பனைக்கு வர உள்ளது இந்த போன். மொத்தமாக ஆயிரம் போன்கள் மட்டுமே இப்போது விற்பனைக்கு கிடைக்கும் என தகவல். சிறப்பு அம்சங்கள்:
- ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட்
- 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- 6.72 இன்ச் திரை அளவு கொண்ட டிஸ்பிளே
- பின்பக்கத்தில் இரண்டு கேமரா. அதில் 108 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா
- 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- கோக் நிறுவனத்தின் டிரேட்மார்க் சிவப்பு நிற டிசைன் உடன் கருப்பு நிறம் சேர்த்து இந்த போன் வெளியாகியுள்ளது
- 5,000mAh பேட்டரி
- 33 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது
- இந்த போனின் விலை ரூ.20,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது
And here you have it, the world’s first ever Coca-Cola smartphone. Presenting the #realme10Pro5GCocaColaEdition at 20,999/- The first sale goes live on 14th Feb, 12 PM. But wait, there’s a flash sale too! #CheersForReal
Join the livestream – https://t.co/aedgi4lUqD pic.twitter.com/k5LqUOxjFd
— realme (@realmeIndia) February 10, 2023