
இந்தியாவில் கடந்த 2020 –ம் ஆண்டு உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன. அதன் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது.
இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளுக்கு ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இந்தநிலையில், சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், கொரியா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானப் பயணிகள், அங்கிருந்து புறப்படும் முன் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை செய்வது கட்டாயம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.