ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரசின் இளங்கோவனுக்கு கை சின்னம், அதிமுகவின் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் அலுவலர் அறிவித்தார். தேமுதிக வேட்பாளர் ஆனந்திற்கு முரசு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
