டெல்லி: உச்ச நீதிமன்றத்திற்கு மேலும் இரண்டு புதிய நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டு உள்ளார். இதனால், மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக முழுமையடைந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34. இதில் காலியாக உள்ள நீதிபதிகளை நிரப்ப கொலிஜியம் பரிந்துரைத்து வந்தது. அதன்படி, கடந்த வாரம் 5 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து, தற்போது மேலும் இரண்டு நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்திற்கு மத்திய அரசு நியமித்துள்ளது. அதன்படி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக […]
