கோவை – நாகர்கோவில், மதுரை ரயில் சேவை மார்ச் 6-ம் தேதி வரை மாற்றம்

கோவை: மதுரை – திருமங்கலம் இடையே இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் கோவை – நாகர்கோவில், மதுரை ரயில் சேவை வரும் மார்ச் 6-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுரை – திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால், நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தினமும் இரவு 7 மணிக்கு கோவை வந்தடையும் ரயில் (எண்: 16321), வரும் மார்ச் 6-ம் தேதி வரை விருதுநகர் – கோவை இடையே ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து விருதுநகர் வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல, கோவையில் இருந்து தினமும் காலை 8 மணிக்கு நாகர்கோவில் புறப்பட்டுச் செல்லும் ரயில் (எண்:16322), வரும் மார்ச் 6-ம் தேதி வரை கோவை – விருதுநகர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில், விருதுநகரில் இருந்து நாகர்கோவில் புறப்பட்டுச் செல்லும்.

கோவையில் இருந்து தினமும் மதியம் 2.40 மணிக்கு மதுரை புறப்பட்டுச் செல்லும் ரயில் (எண்: 16721), வரும் மார்ச் 4-ம் தேதி வரை திண்டுக்கல் – மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயில் கோவையில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். மதுரையில் இருந்து புறப்பட்டு தினமும் நண்பகல் 12.15 மணிக்கு கோவை வந்தடையும் ரயில் (எண்: 16722), மதுரை – திண்டுக்கல் இடையே மார்ச் 5-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மதுரைக்கு பதில் திண்டுக்கல்லில் இருந்து கோவை புறப்பட்டு வரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.