துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய 6 வயது சிறுமியை மீட்ட இந்தியர்கள்! மக்கள் கண்ணீர் மல்க நன்றி… வீடியோ


துருக்கியில் இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுமியை இந்திய வீரர்கள் மீட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21000-ஐ கடந்துள்ளது.

மலைபோல குவிந்து கிடக்கும் கட்டிட இடிபாடுகளை நீக்கி, அங்கே சிக்கியிருக்கும் மக்களை மீட்கவும், பிணங்களை அகற்றவும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மீட்பு படையினர் இரவு பகலாக போராடி வருகின்றனர்.

இந்தியா உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் நாடுகளின் பேரிடர் மீட்பு படைகளையும், நவீன எந்திரங்களையும், ஆம்புலன்ஸ் வாகனங்களையும், மருந்து பொருட்களையும், மோப்ப நாய்கள் அடங்கிய வல்லுனர் குழுவையும் அனுப்பி வைத்து உள்ளன.

6 வயது சிறுமியை மீட்ட இந்திய வீரர்கள்

6 விமானத்தில் துருக்கி சென்ற 100 இந்திய வீரர்களும் மீட்பு பணியில் இறங்கி உள்ளனர்.
அதன்படி NDRF வீரர்கள் அங்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் உயிருக்கு போராடிய 6 வயது சிறுமியை அவர்கள் பத்திரமாக மீட்டனர். இதற்காக இந்திய வீரர்களுக்கு துருக்கி மக்கள் நன்றி கூறினர்.

இது குறித்து இந்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்த இயற்கை பேரிடரில் துருக்கியுடன் இந்தியா துணை நிற்கிறது.
இயற்கை பேரழிவுகள் நிவாரண பணிகளில் அனுபவம் உள்ள இந்தியாவின் NDRF அமைப்பு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நேற்று காசியான்டெப்பில் உள்ள நூர்டாகியில் இருந்து 6 வயது சிறுமியை வெற்றிகரமாக மீட்டெடுத்தது என கூறியுள்ளார்.

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய 6 வயது சிறுமியை மீட்ட இந்தியர்கள்! மக்கள் கண்ணீர் மல்க நன்றி... வீடியோ | India Ndrf Team Rescues 6 Year Old Girl Turkey

Business Today



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.