பாஜக எம்.பி.க்களை வெளுத்து வாங்கிய கனிமொழி எம்.பி!!

உடன்கட்டை ஏறும் மூட பழக்க வழக்கத்தை நாடாளுமன்றத்தில் பா.ஜ.க எம்.பி சந்திர பிரகாஷ் ஜோஷி பெருமையாக பேசியதற்கு தி.மு.க எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது மக்களவையில் பேசிய பா.ஜ.க எம்.பி சந்திர பிரகாஷ் ஜோஷி, அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பின் போது தன்மானம் காக்க ராணி மத்மாவதி தீக்குளித்ததாகக் குறிப்பிட்டார்.

பா.ஜ.க எம்.பி சந்திர பிரகாஷ் ஜோஷியின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தி.மு.க எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் சுப்ரியா சூலே, ராஜா, கே.முரளிதரன், இம்தியாஸ் ஜலீல் உள்ளிட்ட எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.

பா.ஜ.க எம்.பி சந்திர பிரகாஷ் ஜோஷி தனது பேச்சுக்கு மன்னிப்பு தெரிவிக்க வேண்டும், அவர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் முழக்கங்களைத் தொடர்ந்து, அவைத்தலைவர் ஓம் பிர்லா, பா.ஜ.க எம்.பி சந்திர பிரகாஷ் ஜோஷி தனது உரையை திரும்ப பெரும் படி கேட்டுகொண்டார். அதன்படி, பா.ஜ.க எம்.பி தனது உரையை திரும்ப பெருவதாக தெரிவித்தார்.

பின்னர் இதுகுறித்து பேசிய கனிமொழி எம்.பி., தீண்டத்தகாதவர்கள், மானம் என்ற பெயரில் பெண்களை தீயில் தள்ளப்பட்ட நிகழ்வுகள் மறக்க முடியாதது. அதை கொண்டாடும் வகையில் பேசிய பா.ஜ.க எம்.பி.யின் செயலால் வெட்கப்படுகிறேன் என்று கூறினார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.