மும்பை: மும்பை -சோலாப்பூர், மும்பை- சாய்நகர் ஷீரடி ஆகிய இரு வந்தேபாரத் ரயில் சேவையினை மஹராஷ்டிராவில் இன்று(பிப்.,10) பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறுகையில், புதிய இந்தியாவின் அடையாளம் வந்தே பாரத் ரயில். முதன் முறையாக மகாராஷ்ராவில் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் துவங்கப்பட்டுள்ளன. இந்த ரயில் மும்பை-புனே மக்களுக்கு பெரிதும் உதவும். இதனால் விவசாயிகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் பெரிதும் பயன் அடைவார்கள்.
மஹாராஷ்டிரா முதல்வர் பேசியதாவது: பட்ஜெட்டில் மஹாராஷ்டிராவுக்கு என்ன கிடைத்தது என்று ஒரு சிலர் சொல்கிறார்கள். ரயில்வேக்கு இதுவரை 13,500 கோடி ரூபாய் ஓதுக்கவில்லை. முதன்முறையாக மாநிலத்தில் ரயில்வேக்கு இந்தத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. எனக் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement