Pichaikaran 2: மிரட்டலாக வெளியான 'பிச்சைக்காரன் 2' வீடியோ: உச்சக்கட்ட எதிர்பார்ப்பு.!

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த படம் ‘பிச்சைக்காரன்’. சசி இயக்கியிருந்த இந்தப்படத்தில் நடித்ததோடு மட்டுமில்லாமல் தயாரித்து இசையமைத்திருந்தார் விஜய் ஆண்டனி. தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியான இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தப்படத்தின் ஸ்னீக் பீக் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

இசை அமைப்பாளராக பல்வேறு அதிரடியான வெற்றி பெற்ற பாடல் ஆல்பங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகர் மற்றும் தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்த இவர் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

நீண்ட காலமாக பேச்சு வார்த்தையில் இருந்த பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தை தானே இயக்கி தயாரிக்கவுள்ளதாக அண்மையில் அறிவித்தார் விஜய் ஆண்டனி. ‘பிச்சைக்காரன்’ படம் வெளியாகி 6 ஆண்டுகள் கழித்த நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் படப்பிடிப்பு மலேசியா நாட்டில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்று வந்தது. அப்போது சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதில், நடிகர் விஜய் ஆண்டனிக்கு முகம் உட்பட சில இடங்களில் கடும் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த விஜய் ஆண்டனி கிட்டத்தட்ட முழுவதும் குணமடைந்து விட்டதாக அண்மையில் தெரிவித்திருந்தார்.

Jailer: ‘ஜெயிலர்’ படத்துல அது தூக்கால இருக்கும் போல: தீயாய் பரவும் புகைப்படங்கள்.!

இந்நிலையில், ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ஸ்னீக் பீக் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் படத்தின் முதல் 3.45 நிமிட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் மூளை மாற்று அறுவை சிகிச்சை குறித்து பேசப்பட்டுள்ளது. மேலும், இந்த ட்ரைலரை ட்விட்டரில் பகிர்ந்த படக்குழு “பணம் உலகத்திற்கு தீங்கு விளைவிக்கும்” என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ளது.

Jailer: ‘ஜெயிலர்’ படத்துல அது தூக்கால இருக்கும் போல: தீயாய் பரவும் புகைப்படங்கள்.!

இந்த டிரெய்லர் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ‘பிச்சைக்காரன் 2’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி வருகிறது. விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன், அக்னிச் சிறகுகள், காக்கி, மழை பிடிக்காத மனிதன், கொலை மற்றும் ரத்தம் ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.