Prabhas, Kriti Sanon: பிரபாஸ் திருமணம் தொடர்பாக தீயாய் பரவிய தகவல்: வெளிவந்த உண்மை..!

நடிகர் பிரபாஸ், பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக இணையத்தில் செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த தகவலை முழுக்க முழுக்க வதந்தி என்று மறுத்துள்ள பிரபாஸ் தரப்பினர், இவர்கள் இருவரும் ‘ஆதிபுருஷ்’ படத்தில் பணியாற்றும் சக நடிகர்கள் மட்டுமே என தெரிவித்துள்ளனர்.

‘பாகுபலி’ படத்தின் மூலம் பான் இந்திய அளவிலான நட்சத்திர நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் பிரபாஸ். இவர் தற்போது இயக்குநர் ஓம்ராவத் இயக்கத்தில் தயாராகி வரும் ‘ஆதி புருஷ்’ எனும் படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் நடித்து வருகிறார். இந்தப்படம் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வருகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் நடிகர் பிரபாசும், நடிகை கிருத்தி சனோனும் காதலித்து வருவதாகவும், இருவரும் டேட்டிங்கில் ஈடுபட்டிருப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக செய்திகள் வெளியானது. இதனை நடிகை கிருத்தி சனோனும் மறுத்திருந்தார். இதனிடையில் தற்போது இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயம் விரைவில் நடைபெறவிருக்கிறது என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி காட்டுத்தீ போல் பரவியது.

Jailer: ‘ஜெயிலர்’ படத்துல அது தூக்கால இருக்கும் போல: தீயாய் பரவும் புகைப்படங்கள்.!

இது தொடர்பாக பிரபாஸின் நெருங்கிய நட்பு வட்டாரம் தற்போது விளக்கமளித்துள்ளது. அதில், ” இந்த செய்தி முற்றிலும் பொய். இந்த செய்தியில் உண்மை இல்லை. இது வதந்தி. இவர்கள் இருவரும் ‘ஆதி புரூஷ்’ படத்தில் நடிக்கும் சக நடிகர்கள் மட்டும்தான். பரபரப்பாக பேசப்படும் இந்த கதையில் சிறிதளவும் உண்மை இல்லை. இது யாரோ ஒருவரின் கற்பனை. இவர்கள் பரப்பும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம்.” என்று தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் பிரபாஸ், கிருத்தி சனோன் தொடர்பாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஓம் ராவத் இயக்கும் ‘ஆதி புரூஷ்’ படத்தில் பிரபாஸ், கிருத்தி சனோன், சையீப் அலி கான், சன்னி சிங் மற்றும் வத்ஸல் ஷெத் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். ‘ஆதிபுருஷ்’ படம் இந்த வருடம் ஜூன் மாதம் 16ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEO: ‘லியோ’ படத்திற்கு வந்த கடும் சிக்கல்: தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.