அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன் சுருட்டி பகுதிக்கு அருகில் ஒரு கிராமத்தில் வசித்து வரும் ஜெயமணி என்பவர் நல்ல மது போதையில் உதயநத்தம் கிராமத்தில் வசிக்கும் கார்த்திக் என்ற நபருடன் தகராறு செய்துள்ளார். இதன்பின் ஜெயமணியை செல்போனில் தொடர்பு கொண்டு கார்த்திக் பேசியுள்ளார்.
இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த முன் விரோத பிரச்சனைகளுக்கு பவித்ரன் தான் காரணம் என்று கூறி அதே பகுதியைச் சேர்ந்த பவித்திரனை தலையில் அறிவாளால் வெட்டி இருக்கின்றார் ஜெயமணி. திருமணமாகி வெறும் 15 நாட்கள் மட்டுமே ஆகிய நிலையில் பவித்ரனுக்கு இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது.
மேலும் அப்போது தடுக்க வந்த பவித்திரனின் தந்தை சேட்டுவுக்கும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், வெட்டுப்பட்ட இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
பவித்திரனுக்கு மூளையில் ரத்தக் கசிவு இறந்ததால் அங்கிருந்து அவர் திருச்சி தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். பவித்ரன் தற்போது கோமா நிலையில் இருக்கின்றார். இது குறித்து, மீன்சுருட்டி போலீசார் இரு தனிப்படைகளை அமைத்து தலைமறைவாகவுள்ள ஜெயமணியை தேடி வருகின்றனர்.