டெல்லி : டெல்லி – மும்பை இடையிலான விரைவுச் சாலையின் முதல் பகுதியை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 12-ம் தேதி ராஜஸ்தானுக்கும், பிப்ரவரி 13-ம் தேதி கர்நாடகாவிற்கும் பயணம் மேற்கொள்கிறார்.பிப்ரவரி 12-ம் தேதி, பிற்பகல் 3 மணியளவில், அவர் தௌசாவை அடைந்து, சுமார் ரூ 18,100 கோடி மதிப்பீட்டிலான நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
டெல்லி- மும்பை விரைவுச்சாலை 1,386 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்தியாவின் மிக நீளமான விரைவுச்சாலை ஆகும். இது டெல்லி மற்றும் மும்பை இடையேயான பயண தூரத்தை 1,424 கிலோமீட்டர் முதல் 1,242 கிலோமீட்டர் வரை அதாவது 12 சதவீதமாக குறைக்கும். மேலும் பயண நேரம் 24 மணிநேரத்தில் இருந்து 12 மணி நேரமாக 50 சதவீதமாக குறைக்கப்படும். இது டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஆறு மாநிலங்களை கடந்து கோட்டா, இந்தூர், ஜெய்ப்பூர், போபால், வதோதரா மற்றும் சூரத் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும். இந்த விரைவுச்சாலையானது பிரதமரின் கதி சக்தி 93 பொருளாதார முனைகள், 13 துறைமுகங்கள், 8 முக்கிய விமான நிலையங்கள், 8 பல்நோக்கு மாதிரி தளவாட பூங்காக்கள் ), புதிதாக வரவிருக்கும் பசுமை விமான நிலையங்களான ஜேவர், நவி மும்பை மற்றும் ஜேஎன்பிடி துறைமுகம் ஆகியவற்றிற்கு முக்கிய இணைப்பு சாலையாக பயன்படும்.
டெல்லி – மும்பை விரைவுச் சாலையின் 246 கிலோமீட்டர் அளவிலான பாதை டெல்லி – தௌசா – லால்சோட் பகுதி ரூ.12,150 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை பிரதமர் மோடி நாளை நாட்டிற்கு அர்பணிக்கிறார். இதன் மூலம் படெல்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கு பயண நேரத்தை 5 மணி நேரத்திலிருந்து சுமார் 3.5 மணி நேரமாகக் குறைத்து, முழுப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் ஊக்கத்தை அளிக்கும்.இந்த நிகழ்ச்சியின் போது, ரூ 5,940 கோடிக்கும் அதிகமான திட்ட மதிப்பீட்டில் உருவாக்கப்படும் 247 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.