இங்கிலாந்து காதல் ஜோடி ஒன்று இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆரோவில்லில் அரங்கேறியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆலன் மற்றும் லியோ என்ற காதல் ஜோடி 3 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்கள். இவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர். மூன்றாண்டுகளுக்கு முன்பு அவர்கள் ஆரோவில்லிற்க்கு வந்த நிலையில், ஆண் நண்பர் ஆலன் விவசாய பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
மேலும், லியோ ஒரு மாற்றுத்திறனாளிகளின் பள்ளியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்களது ஐந்தாண்டு காதல் முடிவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்த அந்த தம்பதிகள் தமிழர்களை பார்த்து அவர்களது இந்து முறையில் நடக்கும் திருமண சடங்குகளின் மேல் ஈர்ப்பு கொண்டு அதன்படி புடவை , வேட்டி உள்ளிட்டவற்றை அணிந்து தாலி கட்டி குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த திருமண விழாவில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அவர்களது உறவினர்கள் பலரும் தமிழர்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு கலந்து கொண்டார்கள்.