சுற்றுலா பயணிகள் என்ற தோற்றத்தில்…பிரபல நாட்டிற்குள் நுழைய முயன்ற 18 கர்ப்பிணி ரஷ்ய பெண்கள்


சுற்றுலா பயணிகள் என்று போலியான தோற்றத்தில் அர்ஜென்டினாவிற்குள் நுழைய முயன்ற 18 கர்ப்பிணி ரஷ்ய பெண்கள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

போர் தாக்கம்

ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் கிட்டத்தட்ட ஒரு வருடமாக நடைபெற்று வரும் நிலையில், இரு நாடுகளிலும் வாழும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

போர் தாக்குதல், முற்றிலும் சிதைந்த குடியிருப்பு பகுதிகள், தடைபட்டு போன அத்தியாவசிய தேவைகள் ஆகியவற்றால் உக்ரைன் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் என்ற தோற்றத்தில்…பிரபல நாட்டிற்குள் நுழைய முயன்ற 18 கர்ப்பிணி ரஷ்ய பெண்கள் | 8Pregnant Russian Women Were Detained At ArgentinaTwitter

அதே சமயம் போரை தொடங்கிய ரஷ்யாவும் பொருளாதார தடை, விலைவாசி உயர்வு போன்ற வாழ்வாதார சிக்கல்களில் அவதிப்பட்டு வருகிறது.

தடுத்து நிறுத்தப்பட்ட ரஷ்யர்கள்

இந்நிலையில் சுற்றுலா பயணிகள் என்று போலியான தோற்றத்தில் அர்ஜென்டினாவிற்குள் நுழைய முயன்ற 18 குடும்பங்கள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

18 கர்ப்பிணி பெண்களும் அவர்களின் குடும்பமும் அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

இவர்கள் நாட்டுக்குள் நுழைந்து குழந்தையை பெற்றெடுப்பதற்காக சுற்றுலா பயணிகள் என்ற போலியான தோற்றத்தில் வந்து இறங்கியதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

இவ்வாறு இவர்கள் குழந்தையை இங்கு பெற்றுப்பதன் மூலம் தானாகவே உள்ளூர் குடியுரிமை பெற்று விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.