தேர்தலில் நேரத்தில் செக்… எடப்பாடிக்கு அடிமேல் அடி..!

2019 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து, பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி நகை, பணம் பறிப்பில் சிலர் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பல வீடியோக்கள் வெளியாகி நாட்டையே உலுக்கியதைடுத்து, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹேரேன் பால், பாபு மற்றும் அதிமுகவை சேர்ந்த அருளானந்தம் ஆகியரோ கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், வழக்கு சம்மந்தமாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது விசாரணைக்கு வரவுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களுடன் அரசாணை வெளியிட்ட விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்தவும், காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணிநீக்கம் செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், கடந்த 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாகவும், பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சகோதரர் அளித்த புகாரில் 9 பேர் மீது மட்டுமே குற்றம்சாட்டப்பட்டதாகவும், முழுமையாக விசாரிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் பாதிக்கப்பட்ட சில பெண்கள் மற்றும் புகார் அளித்த சகோதரரின் பெயர்களை வெளியிட்டதால், மற்ற பெண்கள் புகார் அளிக்க முடியாமல் இன்னலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானதாக குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட அப்போதைய காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டுமெனவும், அரசாணையில் பெயர்களை இடம்பெறச் செய்தது குறித்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும், அப்போதைய தலைமை செயலாளரிடமும் விசாரணை நடத்த வேண்டுமென கடந்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி தமிழக முதல்வரின் முகவரி துறையிடம் மனு அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த புகார் மனு ஜூலை 22ஆம் தேதி டிஜிபி மற்றும் கோவை எஸ்.பி.-க்கு பரிந்துரைக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே கடந்த ஆண்டு ஜனவரியில் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை (பிப்ரவரி 13) விசாரணைக்கு வரவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.