ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேர்தல் விதிகளை மீறியதாக தேமுதிக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலகத்திற்கு முன்பாக அனுமதியின்றி கொடிகள் கட்டப்பட்டிருந்ததை கண்டித்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
