’மாணவர்கள் ஆரோக்கியமாக இருக்கனும்’ நல்ல திட்டத்துக்கு விளம்பரதூதராக மாறிய நயன்தாரா

சத்யபாமா இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி 35-ம் ஆண்டு கலாச்சார விழா 2023 கொண்டாடியது. சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் மரியஜீனா ஜான்சன், தலைவர் டாக்டர் மரிய ஜான்சன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் திருமதி.நயன்தாராவை “சத்யபாமா பிராண்ட் அம்பாஸடர் 2023” என்று வேந்தர் டாக்டர்.மரியஜீனா ஜான்சன் சமீபத்தில் அறிவித்தார்.

உடன் பல்கலைகழக துணைத் தலைவர்கள் திருமதி.மரியா பெர்னாட்டி தமிழரசி, திரு.ஜெ.அருள் செல்வன், செல்வி மரிய கேத்தரின் ஜெயப்பிரியா ஆகியோர் இருந்தனர். சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தரின் சிந்தனையில் உருவான “மதுகை” (The Strength – தி ஸ்ட்ரெங்த்) என்ற திட்டத்தை நயன்தாரா தொடங்கி வைத்தார்.

சுகாதாரப் பொருட்கள் மற்றும் அதிக கலோரி சத்துக்கள் அடங்கிய தொகுப்புகளை விநியோகிப்பதன் மூலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் இந்த திட்டம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். முதற்கட்டமாக 15 அரசுப் பள்ளிகள், பல்கலைக்கழகத்தின் வேந்தரால் தத்தெடுக்கப்பட்ட 5 கிராமங்கள் இதனால் பயனடைகின்றன.

நயன்தாராவிற்க்கு திருமணம் முடிந்த பிறகு சத்தியபாமா பல்கலைகழகத்தின் பிராண்ட் அம்பாஸடராக அறிவிக்கப்பட்டது குறித்து சத்தியபாமா பல்கலைகழகம் சார்பில் புகைப்படங்கள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.