மாளிகப்புரம் ஓடிடி ரிலீஸ்: பிப்ரவரி 15 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது

சமீபத்தில் நாடெங்கும் பரபரப்பைக் கிளப்பிய மாளிகப்புரம் திரைப்படம், பிப்ரவரி 15 அன்று டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. கல்யாணி என்ற எட்டு வயது சிறுமி சபரிமலைக்குச் செல்ல முயல்வதைப் பற்றிச் சொல்லும் இப்படம் முழுக்க முழுக்க குடும்ப பார்வையாளர்களுக்காக எடுக்கப்பட்ட படம். 

அறிமுக இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கிய இப்படத்தில் ஒரு குழந்தையின் மனதின் பக்தி மற்றும் அப்பாவித்தனம்  பார்வையாளர்களுக்கு அழகாகச் சென்று சேரும்படி  வழங்கப்படுகிறது. சபரிமலை பற்றி பரிச்சயமானவர்கள், தெரியாதவர்கள் என இருபாலருக்கும் புனித யாத்திரையின் அருமையை உணர்த்தும் கடவுள் கருத்தை மறுவிளக்கம் செய்வதே மாளிகப்புரம். 

குழந்தை நட்சத்திரங்களான தேவானந்தனா மற்றும் ஸ்ரீபாத் யான் ஆகியோர் இப்படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, சபரிமலைக்கு மலையேற்றம் செய்யும் சுவாமியாக உன்னி முகுந்தன் படத்தில் பிரமிக்க வைக்கிறார். சைஜு குருப், ரமேஷ் பிஷாரடி, ரஞ்சி பணிக்கர், TG.ரவி, ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். 

Malikappuram OTT Release

விஷ்ணு நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அபிலாஷ் பிள்ளை திரைக்கதை எழுதியுள்ளார். சந்தோஷ் வர்மா,  பி.கே ஹரிநாராயணன் பாடல்களை எழுத, ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார். ஷமீர் முகம்மது படத்தின் எடிட்டராக பணிபுரிந்துள்ளார். Ann Mega Media மற்றும் Kavya Film Company  சார்பில்  பிரியா வேணு மற்றும் நீதா பின்டோ இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

Malikappuram OTT Release

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங்  ஓடிடி தளமாகும். இது இந்தியாவில் பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Malikappuram OTT Release

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.