Malavika Mohanan, Nayanthara: லேடி சூப்பர் ஸ்டாரா? மீண்டும் நயன்தாராவை சீண்டிய மாளவிகா மோகனன்!

நடிகை நயன்தாராவை மீண்டும் சீண்டியுள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

நடிகை நயன்தாராதமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவிலும் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழில் ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம், ஜெயரம் ரவி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா. தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா.
​ சினேகாவின் அசர வைக்கும் எத்னிக் கலெக்ஷன்ஸ்!​
ஹீரோக்களுக்கு இணையாகதென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வரும் நயன்தாரா, இந்திய சினிமாவில் செல்வாக்கு மிக்க நடிகையாகவும் உள்ளார். பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ள நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார். டாப் ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நயன்தாரா ஃபீமேல் சென்ட்ரிக் படங்களிலும் நடித்து வருகிறார்.
​ Biggboss Azeem: ‘எனக்கு எதிரியாய் இருக்க உனக்கு தகுதியில்லை’… சக போட்டியாளரை சாடிய அசீம்!​
மாளவிகா மோகனன்திருமணத்திற்கு பிறகும் நயன்தாராவின் மார்க்கெட் கொஞ்சமும் குறையவில்லை. அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். இந்நிலையில் நடிகை நயன்தாராவை மீண்டும் சீண்டியுள்ளார் நடிகை மாளவிகா மோகனன். ஏற்கனவே ஒரு முறை நடிகை நயன்தாராவை, மருத்துவமனைவியில் மரண படுக்கையில் இருப்பது போன்ற காட்சியில் நடிக்கும் போது கூட ஃபுல் மேக்கப்பில் இருக்கிறார் என சாடியிருந்தார்.
​ Hansika Motwani: தோழியின் கணவரை அபகரித்தேனா? கண்ணீர்விட்ட ஹன்சிகா மோத்வானி!​
லேடி சூப்பர் ஸ்டார்அதற்கு நடிகை நயன்தாராவும் பதிலடி கொடுத்திருந்தார். அந்த சீனில் இயக்குநர் சொன்னப்படிதான் இருந்தது என்று கூறியிருந்தார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள மாளவிகா மோகனன் மீண்டும் நயன்தாராவை அட்டாக் செய்துள்ளார். அதாவது நடிகைகளை லேடி சூப்பர் ஸ்டார் என்ற சொல்லாதீர்கள். தீபிகா படுகோன் ஒரு சூப்பர் ஸ்டார், ஆலியா பட் ஒரு சூப்பர் ஸ்டார் என்று சொல்லுங்கள் என கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா மீது அப்படி என்ன கோபம் உங்களுக்கு என கேட்டு வருகின்றனர்.
​ AK 62, Vignesh Shivan: கையிலேயே வெண்ணெய் இருக்கு… விக்னேஷ் சிவனின் அதிரடி திட்டம்!​
தங்களான்..மலையாள நடிகையான மாளவிகா மோகனன், ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அடுத்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து தனுஷுடன் மாறன் படத்தில் நடித்திருந்தார். தற்போது கிறிஸ்டி என்ற மலையாள படத்திலும் தங்களான் என்ற தமிழ் படத்திலும் யுத்ரா என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
​ Dada: அப்படியே அந்ந படத்தோட அட்ட காப்பி… டாடா படத்தை கழுவி ஊற்றிய ப்ளுசட்டை மாறன்!​
Malavika Mohanan Attacks Nayanthara

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.