லாரி மோதி உயிரிழந்த இளைஞரின் சடலம் 9 மணி நேரம் சாலையில் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொட்டாரக்கரை அடுத்த சதானந்தபுரம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் ஓரமாக சென்று தூங்கிக்கொண்டிருந்த ரதீஷ் என்ற இளைஞர் மீது ஏறி இறங்கியது.
இளைஞர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்ததை பார்த்தும் அந்த லாரி ஓட்டுநர் உயிரை காப்பாற்றாமல், இளைஞரை சாலையின் ஓரமாக இழுத்து போட்டுவிட்டு தப்பிச் சென்றார்.
இரவு விபத்து நடத்த நிலையில், காலை 8 மணியளவில் அவ்வழியாக சென்ற மக்கள் இளைஞர் ரதீஷின் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் அங்கு வந்த போலீசார் இரவு நேரத்தில் அருகில் உள்ள கடைகளுக்கு வந்த லாரிகள் குறித்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்ற லாரி ஓட்டுநர் இந்த கொடூர செயலை செய்தது தெரியவந்தது. பின்னர், புத்தூர் பகுதியில் பதுங்கியிருந்த லாரி டிரைவர் கிருஷ்ணகுமாரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in