அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்பில் இருந்த பொறியாளரை என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான அல் கொய்தா உடன் யாரெல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள் என்று கண்டறியும் பணியை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் திடீர் நடவடிக்கைகள் என்ஐஏ அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அதில், அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்பில் இருந்த ஆரீஃப் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பெங்களூருவில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த 2 ஆண்டுகளாக பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைய அவர் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு செல்ல விரும்பினார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் வேறு என்ன திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன உள்ளிட்ட விவரங்கள் குறித்து என்ஐஏ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in