Rajinikanth: ஈகோ பார்க்காமல் விட்டுக் கொடுத்த ரஜினி: இதனால் தான் அவர் என்றும் சூப்பர் ஸ்டார்

Jailer Rajinikanth: இந்த குணத்தால் தான் எங்கள் தலைவர் என்றுமே சூப்பர் ஸ்டார் என ரஜினி ரசிகர்கள் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ரஜினிகனவு, நம்பிக்கையை மட்டுமே நம்பி சென்னைக்கு வந்து கடினமாக உழைத்து சூப்பர் ஸ்டார் ஆனவர் ரஜினிகாந்த். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் தன்னை தமிழராக பார்ப்பவர். தமிழரின் கலாச்சாரத்தை பற்றி பெருமையாக பேசுபவர். மேலும் தான் ஒரு பெரிய சூப்பர் ஸ்டார் என்கிற ஈகோ இல்லாதவர். அந்த குணம் தான் பிரபலங்களையும், ரசிகர்களையும் என்றும் கவர்ந்திருக்கிறது.
படம்ரஜினிகாந்த் பற்றி சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தலைவர் டி.ஜி. தியாகராஜன் கூறியது பற்றி ரசிகர்கள் பெருமையாக பேசுகிறார்கள். ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஸ்ரீதேவி நடித்த படத்திற்காக பொள்ளாச்சி சென்றிருக்கிறார்கள். அங்கு ஹோட்டலில் புக் செய்திருந்த அறைகளில் ரஜினியை விட சிரஞ்சீவிக்கு சிறு அறையை புக் செய்திருந்தார்களாம்.
சிரஞ்சீவிஹோட்டலுக்கு சென்றதும் தன் அறையை பார்த்திருக்கிறார் ரஜினி. உடனே சிரஞ்சீவியின் அறைக்கு சென்றிருக்கிறார். இது என்ன என் அறையை விட இந்த அறை சிறியதாக இருக்கிறது. நாம் அழைத்ததை மதித்து அண்டை மாநிலத்தில் இருந்து வந்திருக்கிறார். நமக்காக வந்தவர்களை அவர்களின் மனம் குளிரும்படி கவனித்து அனுப்புவது தான் தமிழர்களின் பாரம்பரியம். என் அறையை சிரஞ்சீவிக்கு கொடுத்துவிடுங்கள் என்றாராம் ரஜினி.Rajinikanth:கதை கேட்ட ரஜினி: உனக்கெல்லாம் சொல்ல முடியாது என்ற பிரபலம்​

சூப்பர் ஸ்டார்பெரிய ஸ்டாராக இருந்தாலும் அனைவரையும் சரி சமமாக பார்ப்பது ரஜினியின் நல்ல குணம். தனக்கு ஒதுக்கப்பட்ட அறையை சிரஞ்சீவிக்கு விட்டுக் கொடுத்தது போன்று எல்லாம் செய்யும் மனிதரை இந்த காலத்தில் பார்ப்பது அரிது ஆகும். அதனால் தான் அவர் என்றும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என தியாகராஜன் தெரிவித்துள்ளார். தியாகராஜன் சொல்வது மிகவும் சரி என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

எந்திரன்விட்டுக் கொடுப்பதில் மட்டும் அல்ல தன்னை தானே கலாய்த்துக் கொள்வதும் ரஜினியால் தான் முடியும். எந்திரன் படத்தில் நடித்தபோது நீங்க ஹீரோவா என தன் அண்ணன் வீட்டிற்கு சென்ற இடத்தில் ஒரு முதியவர் அதிர்ச்சி அடைந்ததை மேடையில் கூறியவர் ரஜினி. இந்த ஆளுக்கெல்லாம் ஐஸ்வர்யா ராய் ஹீரோயினாம் என அந்த முதியவர் சொன்னதை அப்படியே தெரிவித்தார் ரஜினி.

​Rajinikanth: இதை போய் பப்ளிக்கா சொல்லிட்டாரே ரஜினி: வேறு யாரும் சொல்லவே மாட்டாங்க

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.