எடப்பாடி புது அஸ்திரம்; ஃபினிஷ் ஆகும் பன்னீர்… இதுல உதயண்ணா தான் ஹைலைட்!

காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவேராவின் எதிர்பாராத மறைவு தமிழ்நாட்டை உலுக்கி போட்டது. இதையடுத்து புதிய அரசியல் கணக்குகளுக்கு வித்திட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க விஷயம் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியிருப்பது தான். ஓ.பன்னீர்செல்வம் கடைசி வரை நம்பர் 2ஆகத் தான் இருக்க வேண்டும். அப்படியே அவரை வெளியேற்றி விட்டு ஒட்டுமொத்த கட்சியையும் கைப்பற்ற காய்களை நகர்த்தினார்.

டெல்லி சிக்னல்ஆனால் டெல்லியின் சிக்னல் வேறு மாதிரியாக அமைந்துவிட்டது. சமாதானமாக செல்லுங்கள். ஒன்றுபட்ட அதிமுகவை தான் எதிர்பார்ப்பதாக கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டது. இதன் பின்னணியில் 2024 மக்களவை தேர்தல் கணக்குகளும் இருப்பதை எடப்பாடி அறிந்திருக்க வாய்ப்புண்டு. இருப்பினும் அதிமுகவை தன் கைக்குள் கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் உறுதியாக இருந்து வருகிறார்.
அதிகாரப்பூர்வ அதிமுகஇதற்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். முன்னதாக இரட்டை இலை சின்னமும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கான இடமும் எடப்பாடி வசமானது. டிடிவி தினகரனும் ஒதுங்கி கொண்டார். சசிகலாவும் வாய் திறக்கவில்லை. எனவே தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக நிறைய அம்சங்கள் ஏற்பட்டுள்ளன.
​​
காங்கிரஸ் கட்சிக்கு டஃப்இந்நிலையில் திமுக கூட்டணி வேட்பாளரை வீழ்த்த வேண்டும் என்பதை விட வாக்கு சதவீதத்தில் பெரிய ஸ்கெட்ச் போட்டு வைத்திருக்கிறார். எப்படியாவது காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் வாக்குகளை நெருங்கி வந்துவிட வேண்டும் என்பது தான் முதன்மையான இலக்காக உள்ளது. இதை வைத்து டெல்லியின் அதிகார மட்டத்தின் துணையுடன் ஓ.பன்னீர்செல்வத்தை காலி செய்துவிடலாம்.
இறங்கி அடிக்கும் ஈபிஎஸ்அதாவது கட்சிக்குள்ளேயே ஓரங்கட்டி வைப்பது. வெளியே விரட்ட பாஜக அனுமதிக்காது. அதன்பிறகு அதிமுகவின் ஒற்றை தலைமைக்கான நாற்காலியில் கம்பீரமாக சென்று அமர்ந்து கொள்வது. இதை வைத்தே 2024 மக்களவை தேர்தலில் கூட்டணி விஷயத்தில் கறாராக செயல்படுவது என வரிசையாக கணக்கு போட்டு வைத்துள்ளார். இதையொட்டி ஈரோட்டில் களப் பணியில் தாமே இறங்கி செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதயநிதி டார்கெட்பிரச்சாரத்தின் போது திமுக அரசை விமர்சிக்கையில் உதயநிதி ஸ்டாலினை அதிகம் டார்கெட் செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளாராம். இதற்காக சில கோஷங்களை தாமே எழுதி தொண்டர்கள் மத்தியில் உலவ விட்டிருப்பது தான் ஹைலைட். குறிப்பாக நீட் விஷயத்தில் முதல் கையெழுத்து என்றெல்லாம் உதயநிதி ஸ்டாலின் பில்டப் செய்திருந்தார்.
நீட் விலக்குஆனால் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளை கடந்து விட்டது. இதுவரை நீட் விலக்கு என்பது கானல் நீராகவே காட்சி அளிக்கிறது. இதனை எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு முறையும் சுட்டிக் காட்டி அரசியல் செய்து வருகிறார். அந்த வகையில் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சார களத்தில் ”ஒத்த செங்கல் உதயண்ணா நீட் விலக்கு எங்கேண்ணா?” என்ற ஒரு கோஷத்தை ரெடி செய்திருக்கிறாராம்.
​​
எடப்பாடி கிராஃப்இது மட்டும் போஸ்டர்களிலும், பிரச்சார மேடைகளிலும் இடம்பெற தொடங்கினால் எடப்பாடியின் பாலிடிக்ஸ் வேற லெவல் என ரத்தத்தின் ரத்தங்கள் கொண்டாடி தீர்க்கவும் தயங்க மாட்டார்கள். எனவே எடப்பாடி பழனிசாமியின் கிராஃப் எந்த அளவிற்கு ஏறுமுகமாக மாறப் போகிறது என்பது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தெரிந்துவிடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.