நித்யானந்தா சீக்ரெட்; பவர் சென்டராக மாறும் கைலாசா… வெடிக்கும் புது பாலிடிக்ஸ்!

திருவண்ணாமலையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து பசுபிக் பெருங்கடலில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா எனப் பெயரிட்டு விஸ்வரூபம் எடுத்தவர் சாமியார் நித்யானந்தா. 2010ல் நடிகை ஒருவருடன் இருக்கும் ஆபாச வீடியோ வெளியாகி தமிழ்நாட்டை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. அதன்பிறகு அவரது ஆசிரமங்களில் சோதனை, வழக்குகள், பாலியல் குற்றச்சாட்டுகள், சிறுமிகளை அடைத்து வைத்தல், பெண் பக்தர்களை வசியம் செய்து வெளிநாட்டிற்கு அழைத்து செல்லுதல் என அதிரி புதிரி சம்பவங்கள் அரங்கேறின.

சர்ச்சை பேச்சுகள்ஐன்ஸ்டீனின் சமன்பாட்டை மறுத்து பேசியது, விலங்குகளுக்கும் சமஸ்கிருதம் கற்று தர முடியும் எனக் கூறியது, சூரியனையே உதிக்க விடாமல் தடுப்பேன் எனப் பேசியது என சமூக வலைதளங்களை அதகளம் செய்து நெட்டிசன்களுக்கு கண்டென்ட் ஆக மாறினார். இதற்கிடையில் ஆபாச சிடி விவகாரத்தில் கைதாகி ஜாமினில் வெளியாகி இருந்தார். மறுபுறம் தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி என பல்வேறு மாநிலங்களில் தனது ஆசிரமங்களின் கிளைகளை விரிவுபடுத்தினார்.
தனி நாடு கைலாசாஇந்நிலையில் தான் திடீரென இந்தியாவில் இருந்து எஸ்கேப் ஆகி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தார். தான் வசிக்கும் தீவிற்கு கைலாசா என்று பெயர் வைத்தார். அங்கு செல்வதற்கு தனி பாஸ்போர்ட். அந்நாட்டிற்கு தனியாக கொடி, வெளியுறவுக் கொள்கை, வங்கி, கரன்சி, இணையதளம் ஆகியவற்றை வெளியிட்டு வரிசையாக ஆட்டம் காட்டினார். அவ்வப்போது யூ-டியூபில் பேட்டி கொடுத்து தன்னுடைய இருப்பை உறுதி செய்து கொண்டார்.
தேடப்படும் குற்றவாளிகைலாசாவில் நித்யானந்தா உடன் பெண் தோழிகள் பலரும் தஞ்சமடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களது பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மீட்டு தர இந்தியாவில் போராடி கொண்டிருக்க கைலாசாவில் ராஜா போன்ற வாழ்க்கையை நித்யானந்தா வாழ்ந்து வருகிறார். இவர் மீது பெங்களூருவில் சில வழக்குகள் இருப்பதால் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார்.
கார்ப்பரேட் பாலிடிக்ஸ்கைலாசா எங்கிருக்கிறது? நித்யானந்தா பிடிபடுவாரா? என்றெல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கைலாசாவில் இருந்து கொண்டு சர்வதேச அளவில் கார்ப்பரேட் அரசியல் செய்ய தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் சில கோயில்களை விலைக்கு வாங்கியிருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
பெருகும் வருமானம்இவற்றின் மூலம் பெரிய அளவில் வருமானம் ஈட்ட திட்டங்கள் உருவாக்கி வைத்திருக்கிறாராம். இந்த வருவாயை கைலாசாவில் முதலீடு செய்வதுடன், மேலும் பல நாடுகளில் தனது ஆசிரமங்களை திறக்கவும் ஆலோசனை செய்து வருவதாக தெரிகிறது. கைலாசாவில் அனைவருக்கும் சகல வசதிகளும் கிடைக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து வருகிறார். புதிய குடிமக்களுக்கு கதவுகளையும் திறந்து விட்டிருக்கிறார்.
இலங்கை விஜயம்இந்நிலையில் கைலாசா தீவு எங்கிருக்கிறது என ஒவ்வொரு சமயத்திலும் வெவ்வேறு யூகங்கள் வெளியான நிலையில், தற்போது புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. பசுபிக் பெருங்கடலில் கோஸ்டா ரிகா தீவுகளில் ஒன்றில் தான் அந்த கைலாசா இருக்கிறதாம். இலங்கையில் பாஜக அரசியல் ரீதியாக காய்களை நகர்த்தி வரும் நிலையில் நித்யானந்தா மூலம் சில திருப்புமுனை சம்பவங்கள் அரங்கேறலாம் என்ற நெருப்பை பற்ற வைத்துள்ளனர் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.