சேலத்தில் முன்பதிவு பெட்டியில் டிக்கெட் எடுக்காமல் பயணித்து அட்டூழியம் செய்த வட மாநில தொழிலாளர்களை ரயில்வே போலீஸார் பாதி வழியில் இறக்கிவிட்டனர்.
வட மாநிலத் தொழிலாளர்கள் அட்டூழியம் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பு வட இந்தியாவில் மட்டும் இருந்த டிக்கெட் எடுக்காமல் ரிசர்வேஷன் பெட்டியில் பயணிக்கும் அவர்களது கலாச்சாரம் தற்போது தமிழ்நாட்டிலும் பரவி வருகிறது.
ஆனால் தமிழ்நாட்டு மக்கள் உரிய பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், சேலத்தில் ரயிலில் பயணித்த வட மாநிலத் தொழிலாளர்கள் செய்த அட்டூழியத்தால் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து புறப்பட்ட பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது தின்னப்பட்டியில் பெண்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏனென்றால், முன்பதிவு பெட்டியில் அமர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் பயணித்ததுதான் அதற்கு காரணம். இதனையடுத்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீஸார் பயணிகளை சமாதானப்படுத்தினர்.
பின்னர் வட மாநிலத் தொழிலாளர்களை பாதி வழியில் இறக்கிவிட்டு ரயில் புறப்பட ஏற்பாடு செய்தனர். வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் முன்பதிவு பெட்டிகளில் அமர்ந்து மிரட்டும் சம்பவம் தொடர்கதையாகி வரும் நிலையில், பயணிகள் போராட்டம் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in