போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைத்தார் விக்னேஷ் சிவன். மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது.
இதையடுத்து பாடல்கள் எழுதுவதில் கவனம் செலுத்திய விக்னேஷ் சிவனுக்கு ஒரு இயக்குனராக நானும் ரவுடி தான் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இப்படத்தின் வெற்றி அவருக்கு சூர்யாவை இயக்கும் வாய்ப்பை பெற்று தந்தது.
Thalapathy vijay: தளபதி 68 ..யாரும் எதிர்பாராத ட்விஸ்டை வைத்த விஜய்..ஒர்கவுட் ஆகுமா ?
ஆனால் அவ்வாய்ப்பை அவர் சரிவர பயன்படுத்தவில்லை என்றுதான் சொல்லவேண்டும். சூர்யா மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் தோல்வியை தழுவியது. இதையடுத்து கடந்தாண்டு விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெற்றிபெற்று விக்னேஷ் சிவனை வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்தது.
கூலிங் கிளாசுடன் மாஸாக வந்த மோகன்லால்!
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் அஜித்தின் AK62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப்போகின்றார் என்ற செய்தி லைக்கா நிறுவனத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. விக்னேஷ் சிவனும் கதையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
ஆனால் தற்போது விக்னேஷ் சிவனின் கதை பிடிக்கவில்லை என்ற காரணத்தால் அவரை AK62 படத்திலிருந்து அஜித் மற்றும் லைக்கா நிறுவனம் நீக்கியது. இது கோலிவுட் வட்டாரத்தை சார்ந்தவர்களை அதிர்ச்சியாக்கியது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி பல தரமான படங்களை தயாரித்து வருகின்றனர்.
ஆனால் விக்னேஷ் சிவனுக்கு AK62 வாய்ப்பு பறிபோனதை அடுத்து ரவுடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் தயாரிக்கும் படங்களுக்கு பைனான்ஸ் செய்ய பைனான்சியர்கள் தயக்கம் காட்டுகிறார்களாம்.
இதையெல்லாம் சரிசெய்ய தற்போது விக்னேஷ் சிவன் ஒரு படத்தை இயக்கி அப்படத்தின் வெற்றியின் மூலம் தான் யார் என நிரூபிக்கும் முனைப்பில் இருப்பதாக தகவல்கள் வருவது குறிப்பிடத்தக்கது.