சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் ‘மாவீரன்’ படம் உருவாகி ரிலீசுக்கு தயாராகவுள்ளது. இந்நிலையில் இந்தப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அதிரடியான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கடந்த வருட ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ படம் வெளியானது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப்படம் பாக்ஸ் ஆபிசில் 100 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது. அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்தப்படத்தை இயக்கியிருந்தார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
‘டான்’ பட வெளியீட்டை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த படத்தை அனுதீப் இயக்கினார். தமிழ், தெலுங்கு மொழியில் ‘பிரின்ஸ்’ என்ற பெயரில் இந்தப்படம் உருவானது. சத்யராஜ், உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா, பிரேம்ஜி, நவீன் பொலிசெட்டி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்த ‘பிரின்ஸ்’ கடந்த வருட தீபாவளிக்கு ரிலீசானது. ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை குவித்த ‘பிரின்ஸ்’ படம் வெளியான ஒரே வாரத்தில் பல திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது.
இந்நிலையில் சிவகாரத்திகேயன் தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். யோகி பாபு நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வினின் இரண்டாவது படைப்பாக இந்தப்படம் உருவாகி வருகிறது. அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்கும் இந்தப்படத்தில் இயக்குனர் மிஷ்கின், சரிதா, யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
Vaathi: ‘வாத்தி’ படத்திற்கு எதிராக பரபரப்பு புகார்: திட்டமிட்டபடி வெளியாகுமா.?
இந்நிலையில் ‘மாவீரன்’ படத்தின் முதல் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில் சிவகாரத்திகேயன் தர லோக்கலாக இறங்கி நடனம் ஆடியுள்ளார். முதல் பாடல் வரும் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது. பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
‘பிரின்ஸ்’ பட தோல்வியால் ‘மாவீரன்’ படத்தை எப்படியாவது ஹிட்டாக்கிவிட வேண்டும் எனற முனைப்போடு செயல்பட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
Ajith Kumar: அதிரடியாக சென்னை திரும்பிய அஜித்: ‘ஏகே 62’ அறிவிப்பு எப்போது..?