புதுடில்லி,இன்சூரன்ஸ் எனப்படும் காப்பீட்டு துறையில் மோசடி நடப்பது, ௬௦ சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்தத் துறையில் உள்ள தனியார் நிறுவன அதிகாரிகள் கருதுவதாக, ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
‘டெலாய்ட்’ என்ற ஆய்வு நிறுவனம், காப்பீட்டு துறையில் நடக்கும் மோசடி தொடர்பாக, இந்தத் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவன அதிகாரிகளிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
காப்பீட்டு திட்டங்களில், குறிப்பாக, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளில், அதிகளவில் மோசடி நடந்து வருவதாக, ௬௦ சதவீத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காப்பீட்டு துறை, ‘டிஜிட்டல்’ மயமாகியுள்ளது. இது பெரிய அளவில், தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு உதவுகிறது. அதே நேரத்தில் இது மோசடிகளையும் அதிகரித்துள்ளது.
இந்த மோசடிகளை தடுப்பதே, காப்பீட்டு நிறுவனங்கள் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கை என, இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வழக்கமான பொய் தகவல் கூறி காப்பீட்டு திட்டங்களை விற்பது, மற்ற நிறுவனத்துக்கு வேலை பார்ப்பது போன்ற மோசடி கள் அதிகம் உள்ளன. தற்போது தகவல் திருட்டு புதிதாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement