எமது எதிர்கால சந்ததியினருக்காக நீர் வளத்தை பாதுகாக்க வேண்டியது எம் அனைவரினதும் தலையாய கடமையாகும் என்று நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மகாவலி அதிகார சபையில் நேற்று (15) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
நீர் முகாமைத்துவம் தொடர்பில் தற்போது நிலவும் பிரச்சினைகளால், நீர் வீண்விரயமாவதுடன், நீர் மாசடைதலும் அதிகரித்துள்ளது. இவற்றை தடுப்பதற்காக தேசிய நீர் கொள்கை திட்டமொன்றை உருவாக்க வேண்டும் என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய கொள்கை திட்டத்தை உருவாக்கும் பொறுப்பு உரிய தரப்பினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.