சுல்தான்பூர்: உத்தரப்பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு ரயில்களின் ஓட்டுனரும் காயமடைந்தனர். மேலும் காலியாக இருந்த 8 பெட்டிகள் தடம் புரண்டன. மற்ற பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்ததால் வாரணாசி-லக்னோ மற்றும் அயோத்தி-பிரயாக்ராஜ் வழித்தடத்தில் ரயில்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே மீட்பு குழுவினர் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றினார்கள்.