சென்னையில் தனது பிறந்த நாளுக்கு விருந்து கொடுத்த போது ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரப்பரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் அதே பகுதியில் துணிக்கடை நடத்தி வந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று தனது பிறந்த நாளை கொண்டாட நண்பர்களுடன் திருமங்கலம் பகுதியில் உள்ள உணவகத்தில் உணவு அருந்த சென்று உள்ளார் செந்தில் குமார்.
அப்போது அந்த வழியாக சென்ற பிரகாஷ் என்ற வாலிபருக்கும் செந்தில் குமாருக்கும் இடத்தையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், செந்தில் குமாரை பிரகாஷ் கடுமையாக தாக்கி தப்பி சென்றுள்ளார். செந்தில்குமாரை மீட்ட அவரின் நண்பர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.