பிரித்தானியாவைச் சேர்ந்த இளம் தொகுப்பாளினி ஒருவர் கடந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தபோது, ஆசையுடன் தலையில் மல்லிப்பூ வைத்துக்கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ்நாட்டில் பிரித்தானிய பத்திரிக்கையாளர்
பிரித்தானிய பத்திரிக்கையாளரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான அலெக்ஸ் அவுத்வெயிட் (Alex Outhwaite) தனது டைம்லெஸ் தமிழ்நாடு நிகழ்ச்சிக்காக கடந்த ஆண்டு இந்தியா வந்திருந்தார். அவர் தமிழ்நாட்டில் இருந்த நாட்களில் நிறைய உள்ளூர் நண்பர்களை உருவாக்கினார்.
சமீபத்தில், காதலர் தினத்தன்று அலெக்ஸ் அவுத்வெயிட் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அது மதுரையில் படம்பிடிக்கப்பட்டது. அங்கு பூ விற்கும் ஒரு வயதான பெண்ணிடம், தமிழ்நாட்டு பெண்களைப் போல அலெக்ஸ் தனது தலையில் மல்லிகைப்பூவை சூடிக்கொண்ட வீடியோ தான் அது.
Twitter @AlexOuthwaite
வைரலாகும் வீடியோ
கடைக்கார பெண், மகிழ்ச்சியுடன் அலெக்ஸின் தலைமுடியில் மல்லிகைப்பூவை வைத்துக் கொண்டே அவருடன் உரையாடுகிறார். அலெக்ஸுக்கு பூ மிகவும் அழகாக இருக்கிறது என்பதற்கு அடையாளமாக அப்பெண் தலையை அசைப்பதை வீடியோவில் காணலாம்.
அலெக்ஸ் அவுத்வெயிட் அந்த வீடியோவிற்கு, “தமிழகத்தில் நண்பர்களை உருவாக்குகிறேன்” என்று தலைப்பிட்டுள்ளார்.
Making friends in Tamil Nadu 🇮🇳 pic.twitter.com/x2C1OrvFLQ
— Alex Outhwaite (@AlexOuthwaite) February 14, 2023
இந்த வீடியோவை பார்த்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நெட்டிசன்கள் மிகுந்த அன்பைப் பொழிந்தனர். அவரை தமிழன்ட்டிற்கு வரவேற்பதாக பலரும் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் ஒரு மாதம் கழித்தேன்
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்த அலெக்ஸ், “நவம்பரில் நான் தென்கிழக்கு இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் ஒரு மாதம் கழித்தேன். தமிழ்நாட்டிற்கு நிறைய சலுகைகள் உள்ளன. பல மைல்கள் கடற்கரை, மலைப் பிரதேசங்கள் மற்றும் தேயிலை தோட்டங்கள், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்கள் மற்றும் கலைகளில் கவனம் செலுத்தினேன். எப்பொழுதும் போல, எனக்குப் பிடித்த சில தருணங்கள் திட்டமிடப்படாமால் நடந்தன – புதிய மக்களை சந்தித்தேன்.” என்று கூறினார்.