தேவியின் கொலையை நேரில் பார்த்த காமாட்சி… வெளியே வரும் உண்மைகள் – மாரி சீரியல் அப்டேட்

தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘மாரி’.

இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ‘மாரி’ இரவு நேரத்தில் தேவியம்மாவின் மியூசிக் பாக்ஸ் தேட அப்போது இன்னொரு பக்கம் சங்கர பாண்டியன் தேட இருவருக்கும் கிடைக்காமல் போகிறது.

பிறகு மாரி தேவியம்மாவின் முன்பு கற்பூரத்தை ஏற்றி வைத்து மியூசிக் பாக்ஸ் இருக்கும் இடத்தை காட்டுமாறு வேண்ட அப்போது குங்கும பரணி கீழே விழுந்து ஒரு அறைக்குள் ஓடுகிறது. பிறகு மாரி அந்த ரூமுக்குள் சென்று தேட அங்கு மியூசிக் பாக்ஸ் இருக்கிறது.

மாரியின் கையில் மியூசிக் பாக்ஸ் கிடைத்ததை பார்த்த சங்கரபாண்டி படிக்கட்டில் இருந்து கீழே விழுவது போல டிராமா போட மாரி பதறியோட கையில் இருந்த மியூசிக் பாக்ஸ் கீழே விழுந்து வேறொரு இடத்தில் மறைந்து விடுகிறது‌.

அடுத்து விக்ரம் தேவியின் கொலை குறித்து அறிய சமயபுரம் வந்து ஒருவரிடம் சிறு வயதில் ஒரு கொலையை பார்த்து பேசாமல் போனவர் வீடு எங்கே இருக்கிறது என கேட்க அவர்கள் சுப்ரமணியம் வீட்டை கை காட்டுகிறார்.

image

பிறகு விக்ரம் அங்கு வந்து காமாட்சியிடம் தேவியம்மா கொலை குறித்து விசாரிக்க முதலில் சொல்லத் தயங்கும் அவர் பிறகு நடந்த விஷயத்தை சொல்கிறார். இந்த கொலையை செய்தது யார் என தெரியுமா என விக்ரம் கேட்க உடனே உள்ளே போகும் காமாட்சி கையில் ஒரு செயினை கொண்டு வந்து கொடுக்க அந்த செயினில் டாலருக்குள் தாராவின் போட்டோ இருக்கிறது.

மேலும் விக்ரம் இப்போதும் கொலை செய்தவரை நேரில் பார்த்தால் அடையாளம் காட்டுவீங்களா என கேட்க காட்டுவேன் என காமாட்சி சொல்கிறாள். இதையெல்லாம் கருப்பு உருவம் ஒன்று மறைந்திருந்து பார்க்கிறது.

இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.