ஆஸ்திரேலிய அகதிகள் விசா: சர்ப்ரைஸ் அறிவிப்பு… தீவிர வேட்டையில் எல்லைப் படை!

உலகெங்கும் அகதிகளாக தஞ்சமடைந்து மறுவாழ்வு பெறும் நோக்கில் சட்டவிரோத காரியங்கள் ஏராளம் நடந்து வருகின்றன. குறிப்பாக ஆஸ்திரேலியா செல்ல வேண்டும் என்று அகதிகள் பலரும் விரும்புகின்றனர். ஏனெனில் அங்கு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் குடியுரிமை அளித்து, அரசு தரப்பில் போதிய உதவிகளும் வழங்கப்படுகின்றன. இதுதொடர்பான அகதிகள் விசா நடைமுறைகள் அமலில் உள்ளன.

அகதிகள் தொடர் முயற்சி

இதனால் படகுகள் மூலம் ஆபத்தான பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய கரையை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று அகதிகள் முயற்சி செய்கின்றனர். இது விபரீத விளைவுகளை ஏற்படுத்தினாலும் தட்டு தடுமாறி கரையை அடைபவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இந்த விஷயத்தில் ஆள் கடத்தும் நபர்கள் என்ற பெயரில் புரோக்கர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.

மார்பர்க் வைரஸ்: வெடித்து கிளம்பும் புதிய ஆபத்து… கன்ஃபார்ம் பண்ண WHO!

சட்டவிரோத பயணம்

இவர்கள் அகதிகளிடம் ஒரு தொகையை வாங்கிக் கொண்டு சட்ட விரோத படகுகள் மூலம் அழைத்து செல்கின்றனர். இதுகுறித்து ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தது. காலப்போக்கில் பல்வேறு சட்டத் திருத்தங்களும் கொண்டு வரப்பட்டன. அந்த வகையில் படகுகள் மூலம் ஆஸ்திரேலியா வருபவர்கள் நாடு கடத்தும் கொள்கை கடந்த 2013ல் நடைமுறைக்கு வந்தது.

ஆஸ்திரேலிய அரசு அறிவிப்பு

இருப்பினும் சட்ட விரோத அகதிகள் பயணத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு சர்வதேச அளவில், குறிப்பாக அகதிகள் மத்தியில் மிகுந்த கவனம் ஈர்த்துள்ளது. அதாவது, தற்காலிக பாதுகாப்பு விசாக்கள், பாதுகாப்பான புகலிட விசாக்களில் உள்ள 19 ஆயிரம் அகதிகளுக்கு நிரந்தர விசாக்கள் வழங்கப்படும் என்று கடந்த 13ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

ஓஹியோ ரயில் விபத்து; காற்றும், நீரும்… பதறும் அமெரிக்கா… ஒளிந்திருக்கும் பேரபத்து!

விசா நடைமுறை

இது ஆஸ்திரேலியா செல்ல வேண்டும் என கனவு காணும் அகதிகளின் எண்ணத்தை மேலும் தூண்டியிருக்கிறது. ஆனால் அப்படி ஒரு சூழலை தவிர்க்கும் வகையில் அதிரடியில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளது. அகதிகள் விசா நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டதை அடுத்து எல்லைப் பகுதிகளில் விமானம், கப்பல்கள் மூலம் ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. படகு வழியாக வரும் அகதிகளை எச்சரிக்கும் விதமாக பல மொழிகளில் வீடியோக்களை ஆஸ்திரேலிய எல்லைப் படை வெளியிட்டுள்ளது.

எல்லைப் படை எச்சரிக்கை

இதுதொடர்பாக பேசிய அந்நாட்டு எல்லைப் படை தளபதி ஜோன்ஸ், ஆள் கடத்தும் நபர்களுக்கு உங்களுடைய பாதுகாப்பு பற்றிய அக்கறை கிடையாது. நீங்கள் செல்லும் இடத்தை அடைகிறீர்களா? என்ற கவலையும் இல்லை. ஆள் கடத்தும் நபர்களை நம்ப வேண்டாம். உங்களுடைய உயிர், உறவுகள், உடைமைகள் உள்ளிட்ட அனைத்தையும் நீங்கள் இழக்க நேரிடலாம் என எச்சரித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.