உக்ரைன் முன்னாள் ஜனாதிபதியின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சுவிட்சர்லாந்து


சுவிட்சர்லாந்து, முன்னாள் உக்ரைன் ஜனாதிபதியான விக்டர் யானுக்கோவிச் (Viktor Yanukovich) என்பவருடன் தொடர்புடைய சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளது.

சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை

சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், முன்னாள் உக்ரைன் ஜனாதிபதியான விக்டருடன் தொடர்புடைய சட்டவிரோதப் பணம் என கருதப்படும் சுமார் 130 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை பறிமுதல் செய்யும் நடவடிகைகளை சுவிஸ் அரசு, பெடரல் நிர்வாக நீதிமன்றத்தில் துவக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்திலிருக்கும் விக்டருடைய சொத்துக்கள் 2014ஆம் ஆண்https://www.ndtv.com/world-news/swiss-seek-to-seize-140-million-linked-to-ukraine-ex-president-viktor-yanukovich-3788271
டு முடக்கப்பட்டன. அவற்றை மீட்க உதவுமாறு உக்ரைன் அரசு சுவிட்சர்லாந்தை ஏற்கனவே கேட்டுக்கொண்டுள்ளது.

அதே நேரத்தில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, 1,386 ரஷ்யக் குடிமக்கள் மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கும், விக்டருடைய சொத்துக்கள் மீதான நடவடிக்கைக்கும் தொடர்பில்லை என சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.
 

உக்ரைன் முன்னாள் ஜனாதிபதியின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சுவிட்சர்லாந்து | Action To Confiscate Property

image – File



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.