”தாந்திரீக முறையில் உடலுறவு கொள்கிறேன் என்ற பெயரில் கொடுமை” – ஐஐடி மாணவரின் ‘ஷாக்’ புகார்!

உறவுகளை வளர்த்துக் கொள்ள உதவுவதாக இணையத்தில் தற்போது நூற்றுக்கணக்கான செயலிகள் கிடக்கின்றன. இவை அறிமுகம் இல்லாத நபருடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள துணை செய்கிறது. இத்தகைய செயலிகள் பல ஆபத்தான பின் விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. சில ஆப்கள் நேரடியாகவே பாலியல் ரீதியான தூண்டுதல்களுக்கு வித்திட்டு மோசடிகளுக்கு வலைவிரிக்கிறார்கள். அந்த வலையில் சென்று பலரும் சிக்கிவிடுகிறார்கள். இந்நிலையில், ஐஐடியில் படித்து வரும் இளைஞர் ஒருவர் ஒரு ஆப் மூலம் சென்று மிகப்பெரிய கொடுமைக்கு ஆளாகி அதிர்ச்சி சம்பவம் வெளிவந்துள்ளது.
மும்பையில் உள்ள ஐஐடி பாம்பே கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவருக்கு, தன்பால் ஈர்ப்பாளர்களுக்கான டேட்டிங் செயலி ஒன்றின் மூலமாக 40 வயதான ஆண் ஒருவரிடம் 2 வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ஐஐடி மாணவர், 40 வயதான அந்த ஆண் மீது மும்பை போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், அந்நபர் தன்னுடன் இயற்கைக்கு மாறான வகையில் செக்ஸ் டார்ச்சர் செய்ததாகவும், தாந்திரீக முறையில் உடலுறவு கொள்கிறேன் என்ற பெயரில் உயிரே போகுமளவுக்கு கழுத்தை நெறித்து காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதாகவும் மாணவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

image
மேலும், அந்நபர் தன்னை கை, கால்களை கட்டிப்போட்டு வல்லுறவு செய்ததாகவும், உடல் ரீதியாக காயப்படுத்தியாகவும் புகாரில் மாணவர் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, அவரது மனைவி பலமுறை தன்னை பாலியல் அடிமையாக்கி துன்புறுத்தியதாகவும் அம்மாணவர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் கணவன் – மனைவி இருவரிடம் பாலியலில் ரீதியாக கொடுமைகளை அனுபவித்ததாக அவர் கூறியுள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் அளித்த புகாரை விசாரித்து வருவதாகவும், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போவாய் காவல்நிலைய மூத்த ஆய்வாளர் புதன் சாவந்த் சாவந்த் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட கணவர், மனைவி இருவரும் உயர் படிப்பு முடித்தவர்கள் மற்றும் நல்ல வேலையில் உள்ளவர்கள் என்றும் போலீசார் கூறுகின்றனர்.
ஆப் மூலம் முன்பின் தெரியாதவர்களிடம் சிக்கி பாலியல் ரீதியாக சொல்ல முடியாத கொடுமைகளுக்கு இளைஞர் ஒருவர் ஆளாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.