ஈரோடு: தேர்தல் பறக்கும்படையினர் வீடியோ எடுத்ததால் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. வில்லரசம்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வந்த கூட்டம், தனியார் ரிசார்ட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. தொகுதிக்குட்பட்ட பகுதி இல்லையென கூறி வீடியோ எடுத்த அதிகாரிகளை அதிமுகவினர் தடுத்து நிறுத்தினர். இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.