Love Today:இதுக்காக பிரதீப் கண்டிப்பா வருத்தப்படுவார்: 'லவ் டுடே' இயக்குனரை சாடிய பிரபலம்.!

‘லவ் டுடே’ படத்தை எடுத்தற்காக பிரதீப் ரங்கநாதன் கண்டிப்பாக வருத்தப்படுவார் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்திக் குமார்.

பிரதீப் ரங்கநாதன்ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். இந்தப்படம் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. வேல்ஸ் பிலிம்ஸ் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்த இந்தப்படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராக தமிழ் சினிமாவில் தடம் பதித்தார் பிரதீப் ரங்கநாதன்.

கோமாளி’கோமாளி’ படத்தில் பல ஆண்டுகளாக கோமாவில் இருந்த ஒருவர் அதிலிருந்து மீண்ட பின்னர் என்னென்ன பிரச்சனையெல்லாம் எதிர்கொள்கிறார் என்பதை காமெடி கலந்து சொல்லப்பட்டது. ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்பில் 90 கிட்ஸ்கலை கவரும் விதமாக வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

நடிகரான பிரதீப் ரங்கநாதன்’கோமாளி’ படத்தின் வெற்றிக்கு பிறகு தனது இரண்டாவது படமாக ‘லவ் டுடே’ படத்தை இயக்கினார் பிரதீப். இப்படத்தை இயக்கியதுடன் நடிகராகவும் அரிதாரம் பூசினார் பிரதீப். ரொமாண்டிக் காமெடி படமான இதில் பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்தார். மேலும் ராதிகா, சத்யராஜ், யோகிபாபு, ரவீனா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே ‘லவ் டுடே’ படத்தில் நடித்தனர்.

100 நாட்களை கடந்த லவ் டுடேஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருந்த இப்படத்தை தமிழகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் ரிலீஸ் செய்தது. இப்படம் அண்மையில் 100 நாட்களை கடந்தது. இதற்கான வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

கார்த்திக் குமார் விமர்சனம்இந்நிலையில் ’யாரடி நீ மோகினி’ படத்தில் தனுஷ் நண்பனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவரும் ஸ்டாண்ட் அப் காமெடியுமான கார்த்திக் குமார் ‘லவ் டுடே’ படம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

பிரதீப் ரங்கநாதன் வருத்தப்படுவார்இது தொடர்பாக அவர் அளித்து பேட்டி ஒன்றில், ’10 ஆண்டுகளுக்குப் பிறகு ’லவ் டுடே’ படத்தை இயக்கியதற்காக பிரதீப் ரங்கநாதன் ஒருநாள் கண்டிப்பாக வருத்தப்படுவார். ‘அடிடா அவளை, உதைடா அவள’ என்ற பாடலுக்காக செல்வராகவன் நீண்ட காலத்திற்கு பிறகு வருத்தப்பட்டார். அதேபோல் ’லவ் டுடே’ படத்தை இயக்கியதற்காக பிரதீப் நிச்சயமாக ஒருநாள் வருத்தப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.