ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் தென்னரசை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் பிரசாரம் செய்தார். நேற்று முன்தினம் மாலை ஈரோடு கருங்கல்பாளையம் ராஜகோபால் தோட்டம் பகுதியில் திறந்த வேனில் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்தார். அப்போது அருகில் கைகூப்பியபடி நின்றிருந்த வேட்பாளர் தென்னரசு, தூக்கத்தை சமாளிக்க முடியாமல் தவித்தார்.
ஒரு கட்டத்தில் நின்றபடியே தூங்கி கீழே விழப்போனார். அடுத்த நொடி சமாளித்துக் கொண்டு முகத்தை துடைத்துக்கொண்டு நின்றார். ஆனால் தொடர்ந்து தூக்க கலக்கத்திலேயே இருந்தார். இந்த காட்சியை கூட்டத்தில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதையடுத்து அது வைரலாகி வருகிறது. இதை பார்த்த அதிமுகவினர் எடப்பாடி பேச்சு வேட்பாளருக்கு தலாட்டாகிவிட்டதா என்று கலாய்த்தனர்.