லக்னோ: உத்தர பிரதேசத்தில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் கீழ் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆனால் சில கல்வி நிறுவனங்கள் போலியான மாணவ, மாணவிகளின் பெயரில் உதவித் தொகையைப் பெற்று மோசடி செய்து வருவதை அமலாக்கத் துறை கண்டுபிடித்தது.
இதைத் தொடர்ந்து உத்தர பிரதேச தலைநகர் லக்னோ உட்பட 22 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். லக்னோவில் உள்ள ஹைஜியா இன்ஸ்டிடியூட் ஆப் பார் மஸிக்கு சொந்தமான 3 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.