சிவனின் அழிக்கும் சக்தியே பிரபஞ்சத்தில் புத்துயிர் பிறக்க காரணம் – திரௌபதி முர்மு

சிவன் குறித்து அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புகள் தென்பட தொடங்கியுள்ளது. சிவனின் அழிக்கும் சக்தியே பிரபஞ்சத்தில் புத்துயிர் பிறக்க காரணம் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசினார்.
கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றார். அப்போது பேசிய அவர், சிவனாக இருக்கும் அனைத்திற்கும் நான் தலைவணங்குகிறேன். ஆதியோகி முன்னிலையில் நடைபெறும் இந்த புனித மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்றதை ஆசீர்வதிக்கப்பட்டதாய் உணர்கிறேன்.
image
உலகிலுள்ள பல்வேறு கலாச்சாரங்கள், பக்தி மற்றும் ஞான பாதைக்குமான மூர்த்தியாக சிவன் விளங்குவதுடன், அவர் குடும்ப வாழ்க்கையில் மட்டுமின்றி சன்னியாசியாகவும் இருப்பதால், அவர் தான் இந்த உலகின் முதல் யோகி மற்றும் முதல் ஞானி. சிவன் முக்திக்கான பாதையின் வழிகாட்டியாக விளங்குகிறார். ஆக்கும் மற்றும் அழிக்கும் சக்திகளில் ஒன்றிணைந்த குறியீடாக இருப்பதுடன், அறியாமை எனும் இருளின் முடிவாகவும், ஞான பாதையின் திறப்பாகவும் மஹா சிவராத்திரி விளங்குவதால், வாழ்வின் உயரிய தேடல்களை கொண்டவர்களுக்கு இந்நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
image
நவீன காலத்தின் போற்றத் தக்க ரிஷியாக ஈஷா யோகா மையாயத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் இருக்கிறார். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் நம்முடைய ஆன்மிக அம்சங்களை எண்ணிலடங்கா மக்களுக்கு கொண்டு சேர்ப்பதுடன், ஏராளமான இளைஞர்களை ஆன்மிக பாதையில் ஈர்க்கும் யோகியாகவும் இருக்கிறார். அவருடைய பேச்சு மற்றும் செயல்கள் மூலம் ஆன்மிகம் மட்டுமின்றி சமூக பொறுப்புணர்வை கற்றுக் கொடுப்பதுடன், சுற்றுச்சூழல் சார்ந்த பல பணிகளையும் அவர் முன்னெடுத்துள்ளார்.
image
இந்த மஹா சிவராத்திரி நன்னாள் நமக்குள் இருக்கும் இருளை அகற்றி, வளர்ச்சியும் நிறைவும் நிறைந்த வாழ்வையும், இந்த மஹா சிவராத்திரியின் நல்லொளி நம் ஒவ்வொரு நாளின் பாதையையும் பிரகாசமாக்கட்டும். அணு துகள்களின் வடிவம் சிவனின் நடனத்தின் வடிவத்தோடு ஒத்துப்போவதாக பழங்கால சிற்பங்களின் அடிப்படையில் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆராய்ச்சிகள் கூறிதாக குறிப்பிட்டு பேசினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.