லக்னோ, உத்தர பிரதேசத்தில் எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட சமாஜ்வாதியின் அப்துல்லா அசம்கானின் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, எதிர்க்கட்சியான சமாஜ்வாதியின் மூத்த தலைவர் அசம்கான், ஏற்கனவே ஒரு வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இவருடைய மகன் அப்துல்லா அசம்கானுக்கு எதிராக, ௨௦௦௮ல் தொடரப்பட்ட வழக்கில், இரண்டாண்டு தண்டனை விதித்து சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர் எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட அப்துல்லா அசம்கானின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்தும் நீக்க வேண்டும்’ என, ராம்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ., வான, பா.ஜ.,வைச் சேர்ந்த ஆகாஷ் சக்சேனா கடிதம் கொடுத்தார்.
இதையேற்று, அப்துல்லா அசம்கானின் பெயரை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, ராம்பூர் சட்டசபை தொகுதியின் தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement