ஈரோடு: திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் 2 நாள் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார். 27ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் போட்டியிடும், தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சிகள் முகாமிட்டு வாக்குவேட்டையாடி வருகின்றன. வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று […]