வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஐதராபாத்: கேசிஆர் என்னைப் பார்த்து அஞ்சுக்கிறார் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் குறித்து, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா கடுமையாக சாடியுள்ளார்.

தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய்.எஸ்.ஷர்மிளா, ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற கட்சியை துவக்கியுள்ளார். தெலுங்கானாவில் ஆளுங் கட்சி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய வழக்கில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளாவை போலீசார் நேற்று (பிப்.,19) கைது செய்தனர்.
இந்நிலையில் ஆந்திர முதல்வரின் சகோதரி ஷர்மிளா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கேசிஆர் என்னைப் பார்த்து அஞ்சுக்கிறார். எனது நடைப்பயணம் 3,000 கிலோமீட்டர் தூரம் கடந்துள்ளது. ஆரம்பம் முதல் கே.சி.ஆர். தரப்பினர் இதை முறியடிக்க முயன்று வருகின்றனர். ஆனால் முடியவில்லை.

தெலங்கானாவில் பெண்கள் மதிக்கப்படுவதில்லை. நான் அரசியலுக்கு வந்து நடைப்பயணம் துவங்கியதில் இருந்து ஆளும் கட்சித் தலைவர்கள் என்னை தரக்குறைவான வார்த்தைகளால் பேசுக்கின்றனர்.மகளிர் ஆணையத்தில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளோம்முடிவு செய்துள்ளோம் எனக் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement