ஓபிஎஸ் எடுக்கும் கடைசி முயற்சி: ஓகே சொன்னாரா சசிகலா? ஈரோட்டில் எடப்பாடிக்கு திருப்பு முனை!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான் தான் என ஓ.பன்னீர் செல்வம் கூறிவந்தாலும் பொதுக்குழு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு எப்படி வரும் என்பதைப் பொறுத்தே அதிமுகவுக்கு யார் தலைமை ஏற்பார்கள் என்பது தெரியவரும். இந்த சூழலில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் பயன்படுத்தி அதிமுவில் தனது இருப்பை காட்ட ஓ.பன்னீர் செல்வத்துக்கு வாய்ப்பு வந்தபோதும் அதிலும் எடப்பாடி பழனிசாமியே ஸ்கோர் செய்த நிலையில் ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவே ஏற்பட்டது.

ஓபிஎஸ் எடுக்கும் முடிவு என்ன?இந்நிலையில் அடுத்த கட்ட நகர்வு குறித்து இன்று தான் நியமித்த மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்துக்கு பன்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார். ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இந்த கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் வெயிட் காட்டிய எடப்பாடிஓபிஎஸ் தொடர்ந்து சறுக்கலைச் சந்தித்து வந்தாலும் தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு டெல்லியை எட்ட முடியாததே என்கிறார்கள். ஓபிஎஸ் தனது நிலைப்பாட்டை டெல்லி தலைமையிடம் எடுத்து வைக்க சரியான ஆள் பார்த்து வருவதாக சொல்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பு இறுதி நேரத்தில் தம்பிதுரையை அனுப்பி மோடியிடம் பேசியது அவர்களுக்கு சாதகமாக காட்சிகள் மாற காரணமாக அமைந்தது.
ஓபிஎஸ் சறுக்கலுக்கு இதுவும் காரணம் தான்!ஆடிட்டர் குருமூர்த்தி இவ்வளவு நாள் பாஜகவுக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் பாலமாக இருந்தார். அண்ணாமலையின் எண்ட்ரிக்குப் பிறகு அதிலும் தடங்கல் ஏற்பட்டதாக சொல்கிறார்கள். அண்ணாமலை இயல்பாகவே எடப்பாடி ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே டெல்லியில் தமக்காக பேசுவதற்கு நம்பிக்கையான ஒருவர் அமையும் வரை, அண்ணாமலையின் வாய்ஸுக்கு டெல்லி மதிப்பளிக்கும் வரை அதிமுகவில் கால் வைக்க முடியாது என ஓபிஎஸ் தரப்பு நினைக்கிறதாம்.
ஓபிஎஸ் வகுக்கும் திட்டம்!இந்த சூழலில் தான் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுப்பதற்கு, தொடர்ந்து மீடியாவின் கவனத்தை பெறுவதற்கு சசிகலாவுடன் இணைந்து கைகோர்ப்பதை தவிர வேறுவழில்லை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கோரிக்கையும் அதுவாகத் தான் உள்ளது. எப்படியும் ஈரோடு கிழக்கு தேர்தல் அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். இரட்டை இலை இருந்தாலும், இணைந்து செயல்படவில்லை என்றால் திமுக தான் வெற்றி பெறும் என்ற வாதத்தை மீண்டும் முன்வைக்கலாம் என ஓபிஎஸ் தரப்பு திட்டமிடுகிறது.
ஓபிஎஸ் – சசிகலா: ஈரோடு இடைத்தேர்தலுக்குப் பிறகு!​​சசிகலாவும் தொடர்ந்து தனியாக பயணித்து வரும் நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்குப் பிறகு இரு தரப்பும் இணைய வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். இப்போதே இணைப்புக்கான பணிகளில் கவனம் செலுத்த தொடங்கினால் மட்டுமே மக்களவைத் தேர்தலுக்குள் கட்சிக்குள் எண்ட்ரி கொடுக்க முடியும். அல்லது இருவரும் அந்த தேர்தலிலும் பார்வையாளர்களாகவே இருக்க வேண்டிவரும். எனவே தேர்தல் முடிவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு இறங்கு முகம் தான் என கூறுகிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.