கர்நாடகாவில் இரு பெண் அதிகாரிகள் மோதல்: அந்தரங்க படத்தை வெளியிட்டு புகார்!

கர்நாடக அரசில் உயர் பொறுப்புகளை அலங்கரிக்கும் இரு பெண் அதிகாரிகள் பொதுவெளியில் மோதல் போக்கில் ஈடுபட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக அரசின் அறநிலையத்துறை ஆணையராக பதவி வகிப்பவர் ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ். இவரது அந்தரங்க புகைப்படங்களை ஐபிஎஸ் அதிகாரியான ரூபா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . அதுமட்டுமல்லாமல் ரோகிணி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் பொது வெளியில் வைத்துள்ளார்.

கர்நாடகாவில் கைவினைப் பொருள்கள் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றும் ரூபா தமிழ்நாட்டுக்கும் அறிமுகமானவர் தான். சசிகலா பெங்களூர் சிறையில் இருந்த போது அவர் ஷாப்பிங் சென்றதாகவும், சிறைக்குள் வசதியாக இருக்க பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அந்த புகாரை சொன்னவர் இந்த ரூபா தான்.

ஈரோடு கிழக்கு : கடைசி நேரத்தில் மாறும் வாக்குகள் – யாருக்கு எவ்வளவு?

ரூபா பிப்ரவரி 19ஆம் தேதி (நேற்று) தனது முகநூல் பக்கத்தில் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன் அவரது அந்தரங்க புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

மேலும், ரூபா எழுதியுள்ள அந்த முகநூல் பதிவில், “இப்போது ஏன் இந்த படங்களை வெளியிட வேண்டும் என்று கேட்பவர்களுக்கு இதைத்தான் சொல்ல விரும்புகிறேன். இந்த படங்கள் சமீபத்தில் தான் என் கைக்கு வந்தன. எனக்கு விஷயம் தெரிந்தவுடன் அரசு அளவில் எங்கு சொல்ல வேண்டுமோ அங்கு சொல்லிவிட்டேன்.

கோலாரில் பணியில் இருந்தபோது, தற்கொலை செய்து கொண்ட ரவி, நேர்மையான அதிகாரி. அவரும், ரோகிணியும் மொபைல் போனில், ‘சாட்டிங்’ செய்த குறுந்தகவல் பற்றி சி.பி.ஐ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. ரவி வரம்பை மீறி பேசுகிறார் என்று தெரிந்திருந்தால், அவரது நம்பரை, ‘பிளாக்’ செய்திருக்க வேண்டும். ஆனால், ரோகிணி அப்படி செய்யவில்லை. மாறாக தொடர்ந்து பேசி வந்தார். ஒரு கலெக்டர் தம்பதி குடும்பத்தில் பிரச்னை ஏற்படுத்தி, அவர்கள் பிரிய காரணமாக இருந்தார்” என பல குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேமுதிக செலுத்தும் தாக்கம் – பின்னணி கணக்கு என்ன?

ரூபாவின் இந்த குற்றச்சாட்டுக்கு ரோகிணி ஐஏஎஸ் விளக்கம் அளித்துள்ளார். ”ரூபா, என் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் வைக்கப்பட்ட படங்களை எடுத்து உள்ளார். மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு, என் தனிப்பட்ட படத்தை நான் அனுப்பியதாக கூறியுள்ளார். அந்த அதிகாரிகள் பெயரை வெளியிட அவர் தயாரா? இதுபோன்ற பொய் குற்றச்சாட்டுகளை கண்டு பயப்படாமல் எனது பணியை தொடர்ந்து செய்வேன். அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்,” என கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.