கங்கர்: சட்டீஸ்கர் மாநிலம் கங்கர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் புதிதாக சாலைகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில்,காம்டெடா மற்றும் கட்டக்கல் ஆகிய கிராமங்களுக்கு இடையே சாலை அமைப்பதற்கான பணிகள் நேற்று முன்தினம் நடந்தது.
அப்போது அங்கு வந்த பெண் நக்சலைட்டுகள் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடம் சாலை போடும் பணியை உடனே நிறுத்துமாறு கூறி அவர்களிடம் இருந்த செல்போன்களை பறித்தனர். பின்னர் சாலை போடுவதற்கு பயன்படுத்தும் இயந்திரங்களுக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.